ராக்காச்சி அம்மன் அருவிக்கு போறீங்களா.? அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க.!

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயில் அதிகமாக காணப்படும் நிலையில், மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் நீர்நிலைகள் உள்ள சுற்றுலா தலங்களை தேடி செல்ல தொடங்கி உள்ளனர்

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு உகந்த சுற்றுலா தளங்களில் ஒன்று ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் அருவி

வெளியில் எங்கும் செல்லாமல் மாவட்டத்திற்குள்ளேயே இருப்பதால் சுற்றுலா சென்று வர மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

கடும் வெயில் காரணமாக நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில், கோடை வெயிலானது ராக்காச்சி அம்மன் அருவியையும் விட்டு வைக்கவில்லை

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெள்ளி உருகி வழிவது போல் விழும் நீர்வீழ்ச்சி, பச்சை பசேல் என்று இருந்த ராக்காச்சி அம்மன் கோயில் அருவியின் சுழல் தற்போது கோடை வெயில் காரணமாக வறண்டு காணப்படுகிறது

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

நீர் ஓடிய பாதைகளில் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. இது தெரியாமல் வரும் ஒரு சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ராக்காச்சி அம்மன் கோயில் அருவி திருவில்லிபுத்தூர் வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ளது

அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த வனக்காவலர் ஒருவரிடம் பேசிய போது, இப்போதைக்கு மழை வாய்ப்பு இல்லை என்பதால் ராக்காச்சி அம்மன் கோயில் அருவிக்கு வருவது வீண் தான்

கோடை மழை தொடங்கிய பின்பு ஓரளவுக்கு நீர்வரத்து இருக்கும். நல்ல நீர் வரத்து வேண்டும் என்றால் மே இறுதியில் வந்தால் அருவியில் நன்றாக நீர் வரும் என்றார்