சாலைகளில் ஆக்கிரமித்திருக்கும் மாடுகள்... விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்.!

விழுப்புரம் நகரில் உள்ள, நான்குமுனை சந்திப்பு,நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு, சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் எண்ணற்ற வாகனங்கள் பயணிக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில்அதிவேகமாக வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்

மேலும் இந்த சாலையில்கடந்த சில தினங்களாக மாடுகள் சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு ஓய்வெடுத்து வருவது மட்டுமல்லாமல் சாலையின் நடுவே நடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாத சூழ்நிலையும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது

இதுபோல் சாலையின் பல இடங்களில் நடுவே செல்லும் மாடுகளால் விபத்து ஏற்படுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து வருகின்றனர்

மேலும் இந்த மாடுகளின் உரிமையாளர்கள் இதை கண்டுகொள்ளாத நிலையில், நகராட்சி அதிகாரிகள் மாடுகளை சாலையில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதோடு, மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்

ஆனால் இதை மீறியும் மாடுகள் மீண்டும் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணித்து செல்கின்றனர்

Stories

More

நம்ம மதுரையில செல்பி பாயிண்ட் வரப்போகுது...!

காண்போரை பிரமிக்க வைத்த கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி

நெல்லையில் குள்ளநரி வாழும் அழகிய மலைப்பகுதி பற்றி தெரியுமா!

இதில் பலர் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு ஏற்றி செல்வதாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாடுகள் சாலையில் அமர்ந்துள்ளதை கண்டு அச்சப்பட்டே செல்கின்றனர்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபதாரம் விதித்து, இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை என்ன… எளிமையாக விளக்கும் அரசு செவிலியர்.!