தென்காசியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக அமைந்துள்ள அருவி தான் கும்பவுருட்டி. கேரளா மாநிலத்தின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது
இந்த அருவிக்கு மேற்கரையில் இருந்து அச்சன் கோவில் சாலையில் கொண்டை ஊசி வளைவுகளில் பயணித்து செல்ல வேண்டும்
தமிழக தேர்தல எல்லை சோதனை சாவடிகளை கடந்து முதலில் மணலாறு, அதன் பிறகு கும்பவுருட்டி அருவி அதன் பிறகு அச்சன் கோவிலுக்கு சென்றடையலாம்
செல்லும் வழி முழுக்க காட்டுப்பாதையில் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் காட்டு விலங்குகளை கூட பார்க்கலாம்
சுமார் 500 மீட்டர் மினி டிரக்கிங் செய்து இந்த அருவியை சென்றடையலாம். இந்த அருவிக்கு கீழே உள்ள குழியில் விழுந்து இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அருவி மூடப்பட்டிருந்தது
அதன் பிறகு 25 லட்சம் செலவில் புதியபாலம் அமைத்த பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்
பறவைகள், பூச்சிகள் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் காடுகளுக்குள் நடந்து செல்லும் பயனும் நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும்
மலைகளில் இருந்து உருவாகி ஓடிவரும் தண்ணீரில் குளிப்பது ஒரு ரம்மியமான உணர்வை கொடுக்கும். வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்
மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கும் வாகனங்களுக்கு ஏற்றார் போல் கட்டணங்கள் செலுத்த வேண்டும்
தமிழில் அதிக வசூல் செய்த இந்த டாப் 10 படங்களை தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் முறியடிக்குமா.?