காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும். பெருமாள் எடுத்த பலவிதமான அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று
இந்த சத்யநாராயணருக்கு நடத்தப்படும் பூஜை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. அரிசியின் மேல், கலசத்தில் நீர் நிரப்பி தேங்காய் மாவிலை வைத்து, பூ, பழம் வைத்து சுமங்கலி பெண்கள் குங்குமம் பூஜை செய்து வழிபடுவார்கள்
இப்பூஜை திருமணம், முக்கிய திருவிழாக்கள், வீடு, நிலம் வாங்கும் போது என எந்த ஒரு நல்லகாரியத்தின் போதும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் சத்யநாராயண பூஜையை பெளர்ணமியன்று நடத்துகிறார்கள்
எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும்
அந்தவகையில்,விழுப்புரம் மாவட்டம் பெருந்திட்ட வளாக மேற்புறம் கோவிந்தசாமி நகரில் அமைந்துள்ள, சிவ விஷ்ணு ஆலயத்தில் சுமங்கலி பெண்மணிகள் அர்ச்சகர் மந்திரங்கள் ஓத, சுற்றி இருக்கும் பெண்மணிகள் குங்கும அர்ச்சனை செய்தார்கள்
பூஜை முடிந்த பிறகு வகை வகையான உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இப்பூஜையின் போது சத்யநாராயணரின் வரலாற்றை விவரிக்கும் கதையை, பூஜை செய்பவர்கள் அல்லது வயதான பெரியவர்கள் கூறினார்கள்
இந்த சத்தியநாராயண பூஜை பற்றி கலந்துகொண்ட பெண்மணிகள் கூறுகையில், இந்த சத்தியநாராயண பூஜை செய்வது அவ்வளவு விசேஷமாகும் அதுவும் பௌர்ணமி அன்று செய்வது இன்னும் கூடுதல் விசேஷம் ஆகும்
இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பம் செல்வ செழிப்பாக வளரும் என்பது ஐதீகம். மேலும் சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும். இந்த பூஜையில் பெண்கள் தங்களுடைய மாங்கல்யத்தையும் வைத்து பூஜை செய்யலாம்
ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி அன்று இந்த பூஜை செய்யலாம் என பூஜையில் கலந்து கொண்ட பெண்மணிகள் தெரிவித்தனர்