பலரும் அறியப்படாத  செருக்கலை அணைக்கட்டு... நாமக்கல்லில் எங்க இருக்கு தெரியுமா.?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் உள்ள செருக்கலையில் உள்ளது இந்த சிறிய அணைக்கட்டு. திருமணிமுத்தாறு பாயும் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

இதன் நீளம் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படுவது தான் அணையால் நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன

இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன

நாமக்கல்லில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த செருக்கலை அணைக்கட்டு பரமத்தி வேலூர் பகுதியில் முழுவதும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன

இங்கு மஞ்சள் கரும்பு கோரை புற்கள் மற்றும் காய்கறி வகைகள் அதிகமாக பயிரிடப்படுகின்றன

இவைகளுக்கு முக்கிய ஆதாரமாக இந்த செருக்கலை அணைக்கட்டு காணப்படுகிறது. மிகச் சிறிய அளவில் இருப்பதே இந்த அணைக்கட்டின் சிறப்பாகும்

ஏனென்றால் இங்கே வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஊர் பகுதியில் இருக்கும் சிறுவர்கள் இளைஞர்கள் ஆழம் குறைவாக உள்ள காரணத்தால் இப்பகுதியில் விடுமுறை நாட்களில் அதிக அளவு வந்து குளித்து மகிழ்கின்றனர்

இந்த பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மேலாக இந்த அணையில் இருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது

இதனிடையே இங்குவருபவர்கள் அணையில் உள்ள மீன்களை பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மீன்பிடிக்காலம் வரும் வரையும் இந்த அணைக்கட்டில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது

எனவே யாரும் அறியப்படாத இந்த செருக்கலை அணைக்கட்டிற்கு ஒரு முறை வந்து ரசித்து செல்ல வேண்டும்

next

வந்தாச்சு புதிய வசதி… ஆதார் அட்டையில் இனி ஈசியா அட்ரஸ் மாற்றலாம்.!