தத்தெடுத்த குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட்... வசமாக சிக்கிய கணவன்.!

சமூக வலைதளமான ரெடிட்டில் பெண் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்

41 வயதான இந்த பெண்ணிற்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர்

இருந்தாலும் அவர் தனது குடும்பத்தை இன்னும் விரிவுபடுத்த விரும்பினார்

அதாவது ஐந்தாவதாக ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தார்

அதன்படி அவரது 48 வயதான கணவர் டேவ் வேலை செய்து கொண்டிருந்த நாட்டிலிருந்து அவர் ஒரு குழந்தையை தத்தெடுத்தார்

தத்தெடுத்த குழந்தை வளரத் தொடங்கியதும் அதன் தோற்றம் அவரது சொந்த குழந்தைகளுடன் ஒத்து இருந்தது

அதையே நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் கூறியதும் அந்த பெண்ணுக்கும் சந்தேகம் வர தொடங்கியது

எனவே குழந்தையின் தத்தெடுப்பு அறிக்கையை பெற்ற அவருக்கு அதிலுள்ள குளறுபடிகள் பற்றி தெரியவந்தது

எனவே அந்த பெண் தத்தெடுத்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நினைத்தார்

அதன்படி தனது கணவருக்கும் 7 வயது குழந்தைக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்தார்

டிஎன்ஏ சோதனையின் முடிவை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் இருவரது டிஎன்ஏவும் பொருந்தி இருந்தது

அப்போது தான் அவருக்கு அந்த உண்மையே தெரியவந்தது

அதாவது அவரது கணவருக்கு வேறு நாட்டில் உள்ள பெண் ஒருவருடன் தொடர்பு இருப்பதும், அவருக்கு குழந்தை இருப்பதும் தெரியவந்தது

next

ஹிந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட டாப் 9 தமிழ் படங்கள்.!