தினமும் லேட்டா தூங்குவதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா.?

இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது இன்றைய காலத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இரவு நேரத்தில் தூங்குவது எவ்வளவு முக்கியம் என்பதையே பலரும் மறந்து இருக்கிறார்கள்

இதனால் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படும். எனவே தினமும் இரவில் தாமதமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அதில் இருக்கும் ஆபத்துகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்

லான்சென்ட் ஹெல்த் ஸ்டடி நடத்திய ஒரு ஆய்வில் 40 முதல் 69 வயது வரை இருப்பவர்களில் தூங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்பவர்கள் அல்லது மிகவும் தாமதமாக தூங்குபவர்கள் வழக்கமான ஆயுள்காலத்தை விட இளம் வயதிலேயே இறந்து விடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இரவு முழுவதும் விழித்திருப்பது அல்லது இரவு நேரத்தில் தினசரி தாமதமாக தூங்குவதால் காக்னிட்டிவ் செயல்பாடுகள் என்று கூறப்படும் நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் குறைபாடு அல்லது பாதிப்பு ஏற்படும்

1

காக்னிட்டிவ் செயல்பாடுகள் பாதிப்பு

இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருப்பது அல்லது தூங்கும் நேரம் மாறி மாறி இருப்பது உள்ளிட்டவை உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை கட்டாயமாக உண்டாக்கும். அதுமட்டும் இல்லாமல் இது பசி மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்

2

எடை அதிகரிப்பு

More Stories.

வெண்டைக்காய் நன்மைகளை பற்றி தெரியுமா..?

பூண்டு தோல்களை இப்படியும் பயன்படுத்தலாமா..?

உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..?

இந்த மாற்றங்கள் உடல் பருமனுக்கு வழிவகுத்து, உடல் எடையையும் அதிகரிக்கும். தூக்கம் சரியில்லாத பொழுது, லெப்டின் மற்றும் க்ரேலின் என்று கூறப்படும் ஹார்மோன்களின் இம்பேலன்ஸ் அடிக்கடி பசிப்பது போல உணர வைக்கும் அல்லது பசியின்மையையும் ஏற்படுத்தும்

எடை அதிகரிப்பு

எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். வழக்கத்தை விட அதிகமாக உணவு உட்கொள்வீர்கள். எனவே உடல் எடை ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் பருமனை தவிர்ப்பதற்கு சரியான நேரத்தில் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம்

எடை அதிகரிப்பு

நீண்ட கால தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகவே காணப்படும். உடலுக்கு போதிய அளவு ஓய்வே இல்லை என்றாலே, உடல் சக்தியை இழக்கும். இதனால், நோய்தொற்றுகளை எதிர்த்து போராடும் திறனும் பாதிக்கப்படும்

3

பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம்

உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில், நோய் எதிர்ப்பு செல்கள் உருவாக்கும் தன்மை குறைந்து, ஆன்டிபாடீஸ் எண்ணிக்கையும் குறையும். இதனால், சின்ன சின்ன விஷயங்களுக்கு உடல் பாதிக்கப்படும்

பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம்

More Stories.

உடலில் ‘கெட்ட’ கொலஸ்ட்ரால்  எதனால் உண்டாகிறது..?

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் பிசிஓஎஸ்..

எப்போதுமே இளமையாக இருக்க வேண்டுமா..?

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி தினசரி 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோயை சரியாக நிர்வகிக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்படுவார்கள்

4

நீரிழிவு ஏற்படும் அபாயம்

அதுமட்டுமல்லாமல் தூக்கமின்மை என்பது இன்சுலின் ரெசிஸ்டென்ஸை அதிகரித்து, உடல் சர்க்கரை அளவை சரியாக பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளும்

நீரிழிவு ஏற்படும் அபாயம்

எனவே உடலில் இருக்கும் பலவிதமான ஹார்மோன்களுக்கும் தூக்கமின்மை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதனால் நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை கட்டுக்குள் வைப்பதற்கு சிரமப்படுவார்கள்

நீரிழிவு ஏற்படும் அபாயம்

குழந்தைகளை பாதிக்கும் புற்றுநோய்… ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய உதவும் 8 அறிகுறிகள்.!