டீ அதிகமாக குடித்தால் சருமத்தில் இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்..!

டீ அதிகமாக குடித்தால் சருமத்தில் இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்..!

டீயை நீங்கள் அதிகமாக குடிக்கும் போது உங்களது தூக்கமின்மை இருக்காது. இதனால் எப்போதும் சோம்பலான முகத்தை நீங்கள் பெறுவீர்கள்.

1

நீங்கள் அளவுக்கு அதிகமாக அருந்தும் போது சிறுநீர் அடிக்கடி வெளியேறும். இதனால் உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உங்களது தோல் வறண்டு விடுவதோடு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

2

உடலில் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கிறது. இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உங்களின் சரும துளைகளை அடைத்து முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

3

டீயில் உள்ள காஃபின் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சேர்ந்து உடலின் கொலாஜன் செயலிழப்பை உண்டாக்குகிறது. இதை அதிகமாக உட்கொள்ளும் போது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. குறிப்பாக தோல் தொய்வு மற்றும் சுருக்கம் ஏற்படுகிறது.

4

இரவு நேரங்களில் டீ அருந்தும் போது இதில் உள்ள காஃபின் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. முறையான தூக்கமின்மை உங்களுக்கு கண்களுக்கு கீழே கருவளையங்களை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் சோர்வாகவும், வயதானவராகவு்ம் உங்களை உணரவைக்கும்.

5

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

தற்போது பெரும்பாலான கடைகளில் இஞ்சி, ஏலக்காய் டீயை தயார் செய்கின்றனர். நறுமணம் மற்றும் சுவைக்காக இதை சேர்ந்தாலும் இந்த மசாலாப் பொருள்கள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. இதனால் அழற்சி ஏற்படுவதோடு சருமம் சிவந்தும் போய்விடும்.

6

சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக நீங்கள் டீயை அருந்தும் போது சருமத்தில் அரிப்பு போன்ற தோல் அழற்சி ஏற்படக்கூடும்.

7

சூடான தேநீரை நீங்கள் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, உங்களுக்கு நாள்பட்ட தோல் நோயான ரோசாசியா பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு மூக்கு மற்றும் கன்னம் சிவப்பாக மாறக்கூடும்.

8

அளவுக்கு அதிகமாக டீ அருந்துவதால் சில நேரங்களில் தோல் புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படும் என்கிறது ஆய்வுகள்

9

எனவே இனிமேலாவது அளவுக்கு அதிகமாக நீங்கள் டீ குடிக்காதீர்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் அருந்துவது உங்களது உடல் நலத்திற்கு சிறந்ததாக அமையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

10

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!