பட்டாசு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!

Scribbled Underline

சமீப காலமாக பட்டாசு விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

இந்தியாவின் பட்டாசு தேவையில் 90 சதவிகித பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது

இதில் அவ்வப்போது பட்டாசு விபத்துக்கள் நடந்தேறி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் வச்சக்கார பட்டியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்

அதே போல் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த போது வெடி பொருட்கள் வெடித்ததில் விருதுநகர் அருகே பாவாலி மற்றும் சாத்தூரில் வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழந்தனர்

இப்படி அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து வரும் நிலையில், கடந்த வாரம் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில்

பட்டாசு ஆலைகள் முறையாக பாதுகாப்பு விதிகளை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது

285 வருடத்துக்கு முந்தைய எலுமிச்சை பழம்...

நெருப்பில் பாப்கார்ன் போட்டு எரிக்கும் பண்டிகை... ஏன் தெரியுமா.?

பூமி சுழல்வது ஒரு நொடி நின்றால் என்ன நடக்கும் தெரியுமா?

More Stories.

இக்கூட்ட முடிவில் முறையாக பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத ஆலைகள் மீதும் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பவர்கள் மற்றும்

அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?