விழுப்புரம் அரசு பள்ளியில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சி.!

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது

இந்த கண்காட்சியில் பல்வேறு அரசு குழுக்களின் சார்பில் சிறுதானிய உணவுகள் சமைக்கப்பட்டு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டது

இந்த சிறுதானிய உணவு கண்காட்சியை அரசு ஊழியர்கள் பள்ளி மாணவிகள் கண்டு களித்தும், சிறுதானியங்கள் பற்றி பல தகவல்களையும் அதன் நன்மைகளையும், சிறுதானியத்தில் இது போன்ற உணவுகள் கூட சமைக்கலாம் என தெரிந்து கொண்டனர்

கம்பு, கேழ்வரகு, திணை, வரகு,சாமை, சோளம் போன்ற பல சிறுதானியங்களைக் கொண்டு லட்டு, அடை, பக்கோடா, பொங்கல், முறுக்கு, இட்லி, கேக் போன்ற பல உணவுகள் சமைத்து கண்காட்சிக்கு வைத்தனர்

இந்த கண்காட்சியில் சிறு தானியத்தை எப்படி சமைக்கலாம்.? அதன் பயன்கள் என்ன.? மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன.? என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது

மேலும், பொதுமக்கள் சாப்பிடும் உணவில் தினமும் சிறுதானிய உணவுகளை நிச்சயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சிறுதானியங்கள் மூலம் சமைக்கப்படும் உணவின் பலன் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

சிறுதானிய உணவு கண்காட்சியை கண்டு களித்த மாணவிகள் கூறுகையில், இதுபோன்ற கண்காட்சி எங்களுக்கு ஏற்பாடு செய்ததில் மிகவும் சந்தோஷம் ஏனென்றால் நாங்கள் இதுபோன்ற உணவுகளை பார்த்ததில்லை என்றனர்

Stories

More

எட்டாத உயரத்தில் குகைகளுக்கு நடுவே அமைந்துள்ள அதிசய சிவன் கோவில்...

கோடிகளுக்கு அதிபதியாக உள்ள தஞ்சை விவசாயி..!

பாரதியார் பயின்ற வகுப்பறையின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?

மேலும் சிறுதானியங்கள் பற்றி பல விவரங்களை நாங்கள் அறிந்து கொண்டோம் எனவும் கண்டிப்பாக இந்த சிறு தானிய உணவு முறையை நாங்கள் பின்பற்றுவோம் என மாணவிகள் கூறினர்

குளிர்காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும்  6 ஆரோக்கிய நன்மைகள்.!