100க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... தென்காசியில் சிறுதானிய உணவு திருவிழா போட்டி.!

சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் சிறுதானிய உணவு வகை கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது

அந்தவகையில் தென்காசி மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா போட்டியானது தென்காசி வட்டாரத்தில்

சிறுதானிய ஆண்டை முன்னிட்டு மகளிர் திட்டத்தின் மூலம் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்து உணவு திருவிழா போட்டி நடைபெற்றது

இந்த சிறுதானிய உணவு கண்காட்சி போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதானிய உணவுகளை கொண்டு வந்து காட்சிப்படுத்தினார்

அதில் முருங்கைக்கீரை உணவுகள், முளைகட்டிய தானியங்கள், காய்கறிகள், கீரை சூப் மூலிகை சூப், புட்டு உளுந்தங்களி, பாயாசம், திணை, லட்டு, வாழைப்பூ வடை, தேங்காய் சாதம், குட்டி தக்காளி ஜெல்லி,

கார கொழுக்கட்டை. பீட்ரூட் ஜெல்லி, பாசிப்பயறு கேரட் அல்வா பீட்ரூட் அல்வா, கவுனி அரிசி பாயாசம் கொழுக்கட்டை வகைகள் என 100க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டன

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கண்காட்சியில் இடம்பெற்ற

உணவுகளை பார்வையிட்டு சிறந்த உணவுகளை தேர்வு செய்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்

கோவையில் பாகுபலி குழுவினர் அமைத்த குதிரை பந்தய சிலை.!