அரிசி மாவில் கொழுக்கட்டை செய்யுறத விட இனி சிறுதானியத்தில் செய்யுங்கள்... ரெசிபி இதோ.!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை சேர்ந்த அலமேலு மங்கை (59) என்ற பெண்மணி 15 வருடமாக மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார்

இவர் கோலியனூர் ஊராட்சி புன்னகை மகளிர் குழுவின் தலைவியாவார். இவர் பாரம்பரிய முறையில் சிறு தானியத்தில் பல உணவு ரகங்களை சமைத்து அசத்தி வருகிறார்

அந்த வகையில் அரிசி மாவில் செய்யும் கொழுக்கட்டை விட, சிறுதானியத்தில் செய்யும் கொழுக்கட்டை மிகவும் சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் எனவும், அது எப்படி செய்யலாம் என செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்

சிறுதானிய கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் நமக்கு சிறுதானியங்களான நிலக்கடலை, கம்பு, கேழ்வரகு, சோளம், திணை அரிசி, வரகரிசி, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி ஆகிய தானியங்களை லைட்டாக வறுத்து, அதனை மாவாக எடுத்துக்கொள்ள வேண்டும்

அதனுடன் எள்ளு மற்றும் பாசிப்பருப்பு லைட்டாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இந்த கொழுக்கட்டைக்கு கூடுதல் சுவை மற்றும் நன்மை தருவதற்கு நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்

அதாவது பேரிச்சம்பழம், பாதம், பிஸ்தா, திராட்சை, முந்திரி, டுட்டி ஃப்ரூட்டி,செர்ரி பழம், தேங்காய் துருவல் போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

இப்போ சுவையான கொழுக்கட்டை செய்ய முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நெய்யை ஊற்றி, எடுத்து வைத்திருந்த அனைத்து வகையான நட்ஸ்களை சேர்த்து கிளறிய பிறகு, சிறுதானிய மாவை சேர்த்த பிறகு, வெல்லப்பாகை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் தராமல் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

Stories

More

தீராத சளி, இருமலை விரட்டும் கசாயம்... வீட்டிலே தயாரிக்கலாம்.!

உலர் பழங்களை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

சுத்தமான ஒரிஜினல் நெய்யை கண்டறிய டிப்ஸ்..!

அதன்பிறகு கையால் பிடி கொழுக்கட்டை மாதிரி பிடித்து, பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொண்டால் சூடான சுவையான சத்தான சிறுதானிய கொழுக்கொட்டை தயாராகிவிட்டது

இதனை சுடச்சுட குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தால் எல்லா வகையான சத்துக்களும் கிடைக்கும், இது போன்ற கொழுக்கட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

பொரி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!