திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்
இங்கே ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்
அதன்படி இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா வரும் ஆக.4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற உள்ளது
இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர்
இதையொட்டி கோவில் நிர்வாகம், விகேபுரம் நகராட்சி மற்றும் மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
இந்த சூழலில் வருகிற 2ஆம் தேதி முதல் கோவிலில் குடில் அமைத்துத் தங்குவதற்குப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
எனவே வருகிற 2ஆம் தேதி தனியார் வாகனம், அரசுப் பேருந்துகள் மூலம் கோவிலுக்குப் பக்தர்கள் செல்கின்றனர்
இதன் காரணமாக அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்குச் செல்வதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பாபநாசம் வனச்சரகர் குணசீலன் தெரிவித்துள்ளார்
குடும்பத்துடன் நீங்கள் பார்க்க வேண்டிய 12 தமிழ் படங்கள்.!