மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் நம்பி வந்தவர்களுக்கு நல்வழி காட்டும் கோயில் என பொதுமக்களால் கூறப்படுகிறது. இந்த சட்டைநாதர் கோவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
இந்த கோயிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து வைத்தீஸ்வரன் கோயில் வழியாகவும், நாகப்பட்டினத்தில் இருந்து பொறையார் தரங்கம்பாடி ஆக்கூர் வழியாகவும், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாகவும் சென்று சாமி தரிசனம் செய்யலாம்
சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் சுமார் 90 அடி உயரமுள்ள கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்
இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம் ஆகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறா
முன்பு ஒரு முறை திருஞானசம்பந்தர் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது பார்வதி தேவியான திருநிலை நாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக வரலாறு கூறுகிறது
உலகில் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு உண்டு ஏனெனில் இந்த கோவிலில் சிவன் மூன்று வடிவமாக அருள்பாலிக்கிறார்
அதாவது லிங்க வடிவமாகவும், விஷ்ணுவின் தோலை சட்டையாக அணிந்து சட்டை நாதர் என்றும், உமா மகேஸ்வரியுடன் தோணியப்பராகவும் அருள் பாலிக்கிறார். இதுவே இந்த கோவிலின் தனி சிறப்பாகும்