திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னொரு பழனி... இந்தக் கீழ் பழனி கோவிலின் சிறப்புகள் தெரியுமா.?

கரந்தமலை தொடரில் மலை உச்சியிலுள்ள வனப்பகுதியில் வற்றாத நீர்ச் சுனை கொண்டுள்ளதால் இத்தலம் திருமலைக்கேணி என்று அழைக்கப்படுகிறது

இக்கோவிலானது பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. காலப்போக்கில் இக்கோவிலானது சேதமடைந்து, மூலவர் சிலையான முருகன் சிலை மண்ணோடு மண்ணாகப் பின்னப்பட்டு விட்டது

பிறகு 1979ஆம் ஆண்டு கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலைப் பராமரிக்க ஆரம்பித்தார்

ஆனால் இந்தக் கோவிலின் மூலவர் சிலை பின்னப்பட்டிருந்ததால் அதனை அகற்ற முடியாமல் வேறு ஒரு மூலவர் சிலையைச் செய்தார்

பழைய மூலவரின் சிலையை அகற்ற முடியாத காரணத்தினால் இதனைச் சுற்றி மண்டபம் கட்டி அதன் மேலே இன்னொரு கோவிலை அமைத்து அதில் புதிதாகச் செய்யப்பட்ட முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்தார்

இந்த கோவிலில் என்றும் வற்றாத வள்ளி தீர்த்த கிணறு மற்றும் தெய்வானை தீர்த்தம் உள்ளது

இக்கோவிலில் மௌனகுரு சுவாமிகளான சித்தர் ஒருவர் ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார். அவருக்கென தனி சன்னிதானமும் இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது

பழனியில் முருகனைப் படிகள் ஏறி வந்த தரிசிப்பது போல் இந்த திருமலைக்கேணி கோவிலில் படிகள் இறங்கி வந்து முருகனை தரிசிப்பதால் பக்தர்கள் இக்கோவிலைக் கீழ் பழனி என்று அழைக்கின்றனர்

next

உள்நாட்டு வெளிநாட்டு மக்களை கவரும் காஞ்சி குடில்… அப்படி என்ன இருக்கு.!