நீலகிரி தோடர் இன மக்களின் பூத்துக்குளி சால்வையின் சிறப்புகள் தெரியுமா.?

முழுமையாக எம்பிராய்டிங் செய்யப்பட்ட சால்வையை பூத்துக்குளி என்று தோடர் பழங்குடி மக்கள் அழைக்கின்றனர்

சிகப்பு நிறத்தில் இரண்டு பார்டர்களும் கருப்பு நிறத்தில் ஒரு பார்டரும் இந்த ஊத்துக்குளி சால்வையில் உள்ளது

முழுவதும் கையாலேயே நெய்யப்பட்ட இந்த பூத்துக்குளி சால்வையில் தையல் கலைஞர்கள் எவரும் ஈடுபடவில்லை என்பதே இந்த சால்வையின் தனி சிறப்பம்சம் ஆகும்

ஐந்தரை அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட இந்த பூத்துக்குளி சால்வை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் கையாலயே ஒன்றிணைக்கப்பட்டு தைக்கபட்டுள்ளது

இந்த பூத்துக்குளி சால்வையானது சற்று அதிக அளவு எடை கொண்டதாகவே உள்ளது. சால்வையை அணிவிக்கும் போது சால்வையின் இடது பக்கத்தில் பாக்கெட் வசதியும் வைத்து தைய்க்கப்பட்டுள்ளது

ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் கட்டாயமாக அணிவிக்க வேண்டியதாக இந்த பூத்துக்குளி சால்வை தோடர் இன பாரம்பரியத்தில் இருந்து வருகிறது

சால்வையை அனுபவிப்பதில் கூட இவர்களது பாரம்பரியம் உள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். சால்வையின் சிகப்பு பார்டர்கள் கொண்ட பகுதி முன் பகுதியில் இருக்கும் ஆறு சால்வையை அணிவிக்க வேண்டும்

இந்த சால்வைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருப்பதால் இவர்களது சால்வையின் விலை அதிகரித்துக் கொண்டே போவதாகவும் தோடர் இன பழங்குடி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்

பூத்துக்குளி சால்வை 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்

3 நிமிடத்தில் வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து அசத்தும் நீலகிரி இளைஞர்.!