சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிப்பு.!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் கோடைக்கால விடுமுறையையொட்டி சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டு வருகிறது.விடுமுறை நாட்களில் ரயில்களில் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்வது வழக்கம்

இந்நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகள் வசதிக்காக சென்னை - நாகர்கோவில் இடையே வாரம் மும்முறை சிறப்பு வந்தே பாரத்ரயில் சேவை இயக்கப்பட உள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வாரம் மும்முறை இயக்கப்படும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 28 வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் காலை 05:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02:10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில் திருநெல்வேலிக்கு 12:30 மணிக்கு வருகிறது

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை வந்தேபாரத்வாரம் மும்முறை சிறப்பு ரயில் அதே வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 02:50 மணிக்கு புறப்பட்டு இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் திருநெல்வேலிக்கு 4:30 மணிக்கு வருகிறது

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது