கோவையில் வந்தாச்சு சர்வதேச விளையாட்டு மைதானம்.!

கோவை, குனியமுத்தூரில ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கலை மற்றும் அறிவியல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் கடந்த சில மாதங்களாக அமைக்கப்பட்டு வந்தது.

பணிகள் முடிந்த நிலையில் தற்போது சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் துவங்கப்பட்டுள்ளது இதனை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்

ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு அரங்கம் 2000 பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டுகளை காணும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது

மேலும் விருந்தினருக்கான மாடத்துடன் கட்டப்பட்ட இந்த விளையாட்டு அரங்கம் 698 சதுரமீட்டர் அளவில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது

இந்த விளையாட்டுஅரங்கில் இரண்டு கூடைப்பந்து மைதானங்களும், செயற்கை தரையுடன் ஒரு கால்பந்து மைதானமும், இரண்டுகைப்பந்து மைதானங்களும், 400 மீட்டர் நீமுள்ள சிந்தடிக் ஓடுதளமும் அமைக்கப்பட்டுள்ளது

இரவு நேரங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் விதமாக உயர் மின் கோபுரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இனிமேல் சர்வதேச போட்டிகள் நடத்த வெளிமாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல தேவை இல்லை என்ற நிலையை இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது

வந்தாச்சு தீபாவளி.. புதுபுது மாடலில் கலர் கலரா பட்டாசுகள்.. என்னென்ன தெரியுமா.?