வந்தாச்சு புதிய வசதி...  ஆதார் அட்டையில் இனி ஈசியா அட்ரஸ் மாற்றலாம்.!

இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது . இந்தியாவில் உள்ள அனைவரின் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை இருந்து வருகிறது

எந்த ஒரு அரசு சார்ந்த அலுவல் செயல்களுக்கும் ஆதார் கார்டு வைத்திருப்பது அவசியமாக உள்ளது

பல்வேறு தேவைகளுக்கு ஆதார் பயன்பாடு முக்கியமானதாக இருப்பதால் ஆதார் அட்டையில் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்

ஆதார் அட்டையில் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும்

அந்த ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி, பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற உங்கள் அருகில் உள்ள தாலுக்கா அலுவலங்களிலும் தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம்

அதே போல் ஆதாரில் தொலைபேசி எண் இணைக்கப்பட்டு இருந்தால், ஆதாரில் உள்ள முகவரயை ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம்

ஆதாரில் முகவரி மாற்றத்தை மொபைல் ஃபோனில் செய்து கொள்ளலாம் . பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு செல்போனில் ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதாரை மாற்றமுடியும்

டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், தொலைபேசி கட்டணம் பில், கேஸ் பில் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் தயாராக இருந்தால் முகவரி மாற்றம் எளிமையானது

இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றால் உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம், உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்

https://ssup.uidai.gov.in என்ற இணையதளம் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்

அதைத் தொடர்ந்து முகவரி மாற்றம் என்பதை செலக்ட் செய்து, புதிய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான மேற்சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்

இதற்கு கட்டணமாக பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும். இதனை வைத்து முகவரி மாற்றம் குறித்த ஸ்டேட்டஸை பார்த்துக் கொள்ளலாம்

next

பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் பெற வேண்டுமா.? இப்படி அப்ளை பண்ணுங்க…