Black Section Separator

தஞ்சையில் மட்டும் தயாராகும் கண்ணாடி கலைப்பொருளின் கதை இதுதான்.!

இயல் இசை நாடகம் என கலைகள் மட்டுமல்லாமல் கலைப் பொருட்களை உருவாக்குவதிலும் தஞ்சாவூருக்கென்று தனி பெருமை உள்ளது. தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்ட சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் காலகட்டத்தில் பல்வேறு கலைகளும் கலைப் பொருட்களும் தோன்றின

அந்த வகையில் தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கலைகளில் கண்ணாடி கலைப் பொருட்களும் முக்கியமான ஒன்று. பல்வேறு அளவுகளைக் கொண்ட கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு பலவகையான கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன

கோயில் பள்ளியறை மண்டபம், பல்லக்கு போன்ற கோவில் தொடர்பான பொருட்கள் கண்ணாடி துண்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து திருமண மண்டபம், வாகன அலங்காரம், பூர்ணகும்பம், அலங்காரத் தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு போன்ற அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன

இந்த கலைப்பொருள் தஞ்சையில் ஒரு சிலரால் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அதிலும் தஞ்சாவூர் தெற்கு வீதியை சேர்ந்த செல்வராஜ் கண்ணாடி கலைப்பொருள் செய்யும் தொழிலில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார்

மேலும் இது குறித்து கைவினை கலைஞர் செல்வராஜ் கூறுவையில்’ சாதா கண்ணாடிகளை தேவையான அளவு துண்டுகளாக்கி அரக்குகளில் மூழ்கி தேவையான வண்ணங்களை பூசி அதில் பலவகையான கலைப் பொருட்களை செய்து வருகிறோம்

இது மன்னர்கள் கால பழக்க வழக்கம். விசேஷ நிகழ்வுகளுக்கு குடம், சொம்பு, தாம்பூலம் உள்ளிட்ட கலைப் பொருட்கள் பயன்படுத்தப்படும். சாதாரண பொருட்களை விட கண்ணாடியால் உருவானக் கலை பொருட்களை வைத்து கடவுளை வணங்கும்போது நினைத்தது கைகூடும் என்பதும் ஐதீகம்

ஆனால் தற்போது சிலர் மட்டுமே இந்த பழக்கவழக்கத்தை பின்பற்றுகின்றனர். பெரும்பாலானோர் இந்த கலைப் பொருட்களை பரிசுகள் வழங்குவதற்கு அதிக அளவில் வாங்குகின்றனர். முன்பு தஞ்சையில் 25க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வந்தனர்

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

நாளடைவில் இந்த தொழிலை அழிந்துவிட்டது தற்போது இரண்டு பேர் மட்டுமே செய்து வருகிறோம். நான் முன்பு பலருக்கு பயிற்சியும் அளித்துள்ளேன்

இருந்தும் பெரிதளவில் யாரும் இந்த தொழிலில் ஈடுபடவில்லை. நாங்கள் தயாரிக்கப்படும் பொருட்களை தஞ்சாவூர்,சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் மொத்த விற்பனைக்கு கொடுப்போம்

தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருள் என்பது மிகவும் பாரம்பரியமான ஒன்று இதை அழிந்து விடாமல் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். ஒரு குடம் தயாரிக்க ஒரு நாள் ஆகிவிடும் ஒரு நாளைக்கு எனக்கு ரூ.500 கூலி கிடைக்கும் இதில் லாபம் பெரிதளவில் இல்லை  என்றார்