மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் அறிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறும்போது 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ்
தமிழ் வழியில் 3 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து விதமான கல்வி உதவித்தொகைகள்,
ஊக்கத்தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாக இருக்க வேண்டும்
மேலும் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்குவதற்கு 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தபால்துறை சேமிப்பு கணக்கும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு
‘இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ்’ வங்கி கணக்கும் தொடங்க தபால் துறையும், தமிழக பள்ளிக் கல்விதுறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இதனை பயன்படுத்தி, தங்கள் பள்ளிகளிலோ / அருகில் உள்ள தபால் நிலையங்களிலோ சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தெரிவித்தார்
நயன்தாரா இளமையாக இருக்க இதுதான் காரணமாம்… அவரே பகிர்ந்த டயட் சீக்ரெட்.!