கலைத் திருவிழா... மாநில அளவில் வென்று சாதித்த நெல்லை அரசு பள்ளி மாணவர்கள்.!

அரசு கலைத் திருவிழாவில் நடனமாடிய நெல்லை டவுன் ஜவகர் அரசு பள்ளி மாணவர்கள் பிற மாநில நடனம் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்

அரசு கலைத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன

இதைத்தொடர்ந்து இவர்கள் அனைவரும் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

இவ்வாறு வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் மாநில அளவில் நடத்தப்பட்டன

இந்த போட்டிகள் 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சேலத்திலும் ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு மற்றும் 11,12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு செங்கல்பட்டிலும் போட்டிகள் நடந்தன. அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்

இந்த போட்டியில் பிற மாநில நடனம் என்ற போட்டியில் நெல்லை டவுன் ஜவகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இதற்காக பள்ளியில் வைத்து மாணவர்களுக்கு சிறப்பாக ஆசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர். வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று வேடம் அணிய வைப்பது உள்ளிட்ட நிகழ்வுகளையும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்

அசாத்திய தன்னம்பிக்கையால் வெற்றிகளை குவித்து வரும் நெல்லை பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்.!