இதில் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது. அதோடு ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
பீட்ரூட்டில் இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆன்ஸிடன்ட் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
இரும்பு சத்து நிறைந்த பருப்பு வகைகள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மாதுளையில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைவாக இருப்பதால் இது இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
ஆப்பிள் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்த பழம். எனவே இது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
டேட்ஸ் என்று அழைக்கப்படும் பேரிச்சையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் நிறைவாக உள்ளது. ஏனெனில் இதில் இரும்பு சத்து கொட்டிக்கிடப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
புரக்கோலி இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி, ஃபோலேட் நிறைந்த பூ என்பதால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரும்பு சத்து உறிஞ்சுவதையும் மேம்படுத்துகிறது.
தர்பூசணி உடலின் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்குவது மட்டுமன்றி உடலுக்கு தேவையான இரும்பு சத்தையும் வழங்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது.
நட்ஸ் வகைகளில் பாதாமுக்கு எப்போதும் தனி இடம் கொடுப்பதற்கு அதில் கொட்டிக்கிடக்கும் நன்மைகளுக்காகத்தான். அதில் ஒன்றுதான் இரும்பு சத்து அதோடு விட்டமின் ஈ உள்ளது. எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை பராமரிக்கிறது.
வெள்ளை பட்டாணி, பச்சை பட்டாணி, பீன்ஸ் வகைகள் போன்றவை இரும்பு சத்துக்கு பெயர் போனவை. அதோடு அதில் ஃபோலேட் மற்றும் புரோட்டீன் நிறைவாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
கல்லீரல் மற்றும் பிற உறுப்பு இறைச்சிகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்
சிவப்பு இறைச்சியில் ஹீம் வகை இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்தத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை வேகமாக அதிகரிக்க வழிவகுக்கிறது.