பீடி சுத்தும் வேலை டூ கேண்டீன் உரிமையாளர்கள்... அசத்தும் தென்காசி சுய உதவி குழு பெண்கள்.!

தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் பிரதான தொழிலாக பீடி சுற்றும் தொழில் இருந்து வருகிறது. அதிலிருந்து விலகி, குறிப்பிட்ட அளவிலான பெண்கள் மாறுப்பட்ட சுய தொழில்  தொடங்க ஆரம்பித்துள்ளனர்

அப்படி சுய உதவி குழு பெண்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வரும் உணவகத்தைப் பற்றித் அடுத்தடுத்த ஸ்லைடில் தெரிந்துகொள்வோம்

பீடி சுற்றிக்கொண்டு இருந்து தற்போது கேண்டீன் உரிமையாளராக இருப்பவர்தான் தான் சுரண்டையைச் சேர்ந்த சுய உதவி குழு பெண்கள். தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் இயங்கிக்கொண்டு இருக்கும் கேண்டீன் மகளிர் சுய உதவி குழு பெண்களால் மதிமகள் உணவகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது

பொதுவாக காலேஜ் கேண்டீன் என்றாலே தனியார் காண்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு தான் வழங்கப்படும். ஆனால் தென்காசியில் முதல் முறையாக சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் உள்ள இந்த கேன்டீன் மகளிர் சுய உதவி குழு பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் போதிய உணவக வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்

மதிமகள் உணவகம் தொடங்கப்பட்ட பின்பு மாணவர்களுக்கு இது பெரிதும் பயன்படுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்

மேலும் இந்த உணவகத்தின் மூலம் பீடி சுத்தி வந்த பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்து இருப்பதாகவும் மதிமகள் உணவகம் பெண்கள் தெரிவிக்கின்றனர்

1300 ஆண்டுகள் பழமையான குளத்தை  மீட்க களத்தில் இறங்கிய  தஞ்சை இளைஞர்கள்.!