சில்லென்ற கோவை உக்கடம் ஏரியில் ஆச்சரியப்படுத்தும் ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் சிலைகள்.!

பாரம்பரியப் பழக்கவழக்கங்களும், நவ நாகரீக வளர்ச்சியும் ஒருங்கே பெற்ற கோயம்புத்தூர் பாரம்பரியமான பருப்பு சாதத்திலிருந்து, மருத்துவ குணம் நிறைந்த ருசியான சிறுவாணி தண்ணீருடன், இயற்கையை விரும்புபவர்கள் வாழ்வதற்கு

வயல் வெளிகளும், நகர வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு காஃபே, பெரிய பெரிய உணவு அருந்தும் இடங்கள், குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஏற்றவாறு அமைப்பைப் பெற்றுள்ளது

இந்த சில்லென்ற கோவையில் பொதுமக்கள் பொழுதுபோக்கி சில் பண்ண பல ஸ்பாட் இருந்தாலும் பரபரப்பான பகல் வேளையில் பல வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் பெற்றோர் குழந்தைகளுடன் குடும்பமாக சில் பண்ண நகருக்குள் உள்ள பெஸ்ட் ஸ்டாட் உக்கடம் ஏரி

மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க இங்கு வரும் மக்களை மகிழ்விக்கும் வகையில் இங்குப் பழைய பொருட்களை வைத்து பறவைகள் போன்ற சிலைகள் போன்ற உருவங்களை ஆர்ட் ப்ரம் வேஸ்ட் முறையில் செய்து பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

இதனைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசித்து அதனுடன் ஃசெல்பி எடுத்து மகிழ்கின்றனர்

அதுமட்டும் இல்லாமல், உக்கடம் ஏரியில் மக்கள் பயணம் செய்து குதுகலிக்கும் வகையில் படகு சவாரியும் உள்ளது

இந்த படகில் ஏரி ஒரு ரவுண்ட் அடிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆசை வரும்

உக்கடத்தில் ஹாயாக நடைப் பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்குப் பலவகை உபகரணங்களுடனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் வகையில் பல அம்சங்கள் அமைந்திருப்பதால் உக்கடம் லேக் கோவையன்ஸ்-இன் பேவரைட் ஈவ்னிங் ஸ்பாட் ஆக உள்ளது

next

சுற்றுலா பயணிகளை கவரும் மணல் பரப்பு… அரிச்சல்முனையின் சுவாரஸ்யம் மிகுந்த இயற்கையின் வினோதம்.!