உடல் எடையை கட்டுகோப்பாக வைக்கும் முள் இல்லா கணவாய் மீனின் ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

மீன்களை போன்று இல்லாமல் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், வெளிர் வெண்மை நிறத்தில் முள் மற்றும் செதில்கள் இல்லாமல் தலையில் 8 கைகளுடன் பெரிய கண்களுடன் காணப்படும் மீன் தான் கணவாய் மீன்

இதற்கு Squid fish என்ற ஆங்கில பெயரும் உள்ளது. கண்கள் பெரியதாகவும், ரம்பத்தினை போன்ற பற்களும், இரண்டு துடுப்புகள் வாலில் அமைந்திருக்கும். சிறிய வகை மீன்கள் மட்டுமே இதன் உணவு

எதிரிகள் இதனை தாக்க வந்தால் கருப்பு மை போன்ற திரவத்தினை வெளியிட்டு தன்னை தற்காத்து வாழும். உடல் மெல்லியதாக இருப்பதால் தூண்டில் வைத்து பிடிக்கின்றனர்

ஒமேகா 3 ஊட்டச்சத்துடன் 90 சதவீதம் காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடைய செலினியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டத்திற்கு வலுசேர்க்கிறது

உடலில் ஏற்படும் அலர்ச்சிகளை தடுக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும் மற்றும் தோல்பட்டை வலிகளை சரிசெய்யும்

இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு ஆபத்து ஏற்படும் நோய்களை தடுத்து இதயத்தினை வலுப்படுத்தி பாதுகாக்கிறது

இதயம் மற்றும் தமனியில் படிந்து காணப்படும் கொழுப்புகளை அகற்றுவதால் இதனை கொழுப்பு மீன்கள் என்ற பெயரும் உள்ளது

புரோட்டின் சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருக்க உதவும்

வைட்டமின் பி1, பி2, பி3, ஏ, டி, இ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்க விடாமல் சீராக வைத்திருக்கும்

நீரழிவு நோய்களால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கும். பாதரசம் குறைவாக உள்ளதால் அனைவராலும் சாப்பிட கூடிய உணவாக உள்ளது. தைராய்டு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கிறது

மூளைக்கு தேவையான ஆக்சிஜன் இதில் அதிகளவில் கிடைக்கிறது. உடலுக்கு தேவையான ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கிறது

உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளதால் இந்த கணவாய் மீன்களில் குழம்பு, கிரேவி, வறுவல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும்

next

வாழைப்பழங்களை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!