கோடையில் ஜாலியாக குளிக்க நெல்லை சிட்டிக்குள் செம ஸ்பாட்.!

நெல்லை மாநகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுத்தமல்லி அணைக்கட்டு கோடை காலத்தில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது

ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டு சுத்தமல்லி கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பச்சை பசேல் வயல் பகுதிகளுக்கு நடுவே அமையப்பெற்றுள்ளது

கிராமத்துக்குள் அமையப்பெற்றுள்ள இடம் என்பதால் இங்கு அமைதியான சூழல் நிலவுகிறது

இங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிப்பது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இங்கிருந்து தான் நெல்லை கால்வாய் தனியாக பிரிந்து செல்கிறது

இந்த அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் நடுவே ஒரு சிறிய மலை குன்று ஒன்று இருக்கிறது. அந்த குன்றின் மீது ஒரு சிறு கோவிலும் இருக்கிறது

இந்த குன்றின் மேல் நின்று பார்த்தால் ஆற்றின் பகுதியும், வயல் வெளிகளும் மிக அழகாக தெரியும். இந்து மலைக்குன்றுக்கு மேலே கோடை காலமான தற்போது மிக எளிதாக சென்று வரலாம்

ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் போது இதற்கு செல்வது சற்று கடினமான விஷயமாக இருக்கும்

ஆற்றின் கரையில் பெரிய பெரிய ஆல மரங்கள் நமக்கு நிழல் தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றன, மேலும் சிறு மண்டபங்களுடன் கூடிய சாஸ்தா கோவில் ஒன்றும் உள்ளது

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

இந்த பகுதியின் அருமை தெரிந்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்

மேலும் வீட்டில் இருந்தே உணவு சமைத்து எடுத்து வந்து குளித்து முடித்தவுடன், குடும்பமாக அமர்ந்து உணவருந்தியும் செல்கின்றனர்

கோடை கால வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட நாமும் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சென்று ஆனந்த குளியல் போட்டு வரலாம்

இங்கு செல்ல நம் சொந்த வாகனங்கள் இருந்தால் வசதியாக இருக்கும். அல்லது வாடகை வாகனங்களை அமர்த்தியும் சென்று வரலாம்