தமன்னாவின் ஆடம்பர வீடு போட்டோஸ்...!

தற்போது மும்பையில் உள்ள நடிகை தமன்னாவின் ஆடம்பர வீட்டின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது

2005 ஆம் ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி வெளியான சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற இந்தி படத்தின் மூலம் தமன்னா திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.

தமிழில் அவர் அறிமுகமான கேடி என்ற திரைப்படம் 2006 செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியானது.

இவர் விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

படிக்காதவன், பையா படங்களில் மூலம் தமிழில் தமன்னாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

பாகுபலியில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலம் அடைந்தார்.தெலுங்கிலும் ஏராளமான வெற்றிப் படங்களில், முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் தமன்னா தொடர்ந்து நடித்துள்ளார்.

அண்மையில் இவர் நடித்த ஜீ கர்டா என்ற வெப் தொடர் வெளியானது.  இதை தொடர்ந்து தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரும் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.

இந்நிலையில் கடந்த மாதம் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகை தமன்னாவும நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து தற்போது மும்பையில் உள்ள நடிகை தமன்னாவின் ஆடம்பர வீட்டின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னா பாட்டியாவின் வீடு மிகவும் அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்கிறது. இங்கு அவர் தனது தந்தை ஆனந்த் பாட்டியா, தாய் சந்தோஷ் பாட்டியா மற்றும் செல்ல நாய் பெப்பிள்ஸ் ஆகியோருடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?