புதிய மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து சில கட்டிடங்களுக்கு விலக்கு அளித்து மின்சார வாரியம் அறிவித்துள்ளது
புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ள சில வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்
இதற்கு முன்பு வரை எந்த வகை கட்டிடமாக இருந்தாலும் சரி, புதிய முன் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில கட்டிடங்களுக்கு புதிய மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
அந்த அறிக்கையில் 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை
750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை
14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்ககளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை
அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை என்று கூறப்பட்டுள்ளது
சளி மற்றும் காய்ச்சலின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 10 உணவுகள்.!