ஒரு டன் செம்மரம் 2 கோடியா.? கோடிகளுக்கு அதிபதியாக உள்ள தஞ்சை விவசாயி.!

பொறியியல் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தஞ்சையை சேர்ந்த தாசஸ் குழந்தைசாமி 1999 ஆம் ஆண்டு இவருக்கு சொந்தமான 90 ஏக்கர் விவசாய நிலத்தில் இவர் அப்பாவிற்கு உறுதுணையாக இயற்கை விவசாயத்தில் இணைந்தார்

கடந்த 1996 ஆம் ஆண்டு இவரின் அப்பா செம்மரத்தின் மதிப்பை உணர்ந்து சுமார் இரண்டு ஏக்கரில் செம்மரச் செடியை நட்டு வளர்த்து வந்த நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக காலமானார்

இந்த நிலையில் சுமார் 27 ஆண்டுகள் ஆகிய இந்த செம்மரத்தை விவசாயி தாசஸ் குழந்தைசாமி அரசு அனுமதி பெற்று வெட்ட உள்ளார்

இரண்டு ஏக்கரில் வைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் செம்மரத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் 50 கோடிக்கும் அதிகமாக லாபம் கிடைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

ஆந்திராவில் இருந்து விதைகளை வாங்கி தங்களது நர்சரியிலேயே தயாரித்து சுமார் 2000 மரக்கன்றுகள் வரை இரண்டு ஏக்கர் நிலத்தில் நட்டுள்ளனர்

தற்போது கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகிவிட்டது இதை வெட்டுவதற்கு அரசு அனுமதி பெற்றுள்ளார்களாம். இன்னும் ஒரு சில மாதங்களில் அதிக எடை உள்ள மரங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட மரங்களை வெட்ட உள்ளோம் என தாசஸ் கூறினார்

Stories

More

குழந்தைகளுக்கு காலையில் காபி, டீ  கொடுப்பதை விட இதை கொடுங்கள்....!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

தேன் வளர்ப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா.?

நாங்கள் மரக்கன்றுகளை நடும்போது இவ்வளவு விலை போகுமா என்றெல்லாம் தெரியாது.  அப்போது வெட்டுவதற்கு அரசு அனுமதியே கிடையாது. கடந்த 2017 ஆம் ஆண்டு தான் செம்மரம் வளர்க்கலாம், வெட்டலாம்  என்ற விதிமுறைகளை அரசு அறிவித்தது

அதேபோல் 2019 ஆம் ஆண்டு இதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டது. இதில் இவ்வளவு கோடிகள் லாபம் கிடைக்க உள்ளது என்பது சந்தோஷம் தான்

ஆனால் நாங்கள் தயாரித்த கன்றுகளில் கிட்டத்தட்ட பத்து லட்சம் செம்மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளோம். தற்போது 1 லட்சம் கன்றுகள் வரை நர்சரியில் இருக்கிறது

என் அப்பா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தவறிவிட்டார். ஆனால் மாற உள்ள பல விவசாயிகளின் வாழ்க்கைக்கு என் அப்பா ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார் என்பது மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று விவசாயி தாசஸ் குழந்தைசாமி கூறினார்

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா.?