தஞ்சாவூர் என்றாலே தொன்மையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது . தஞ்சையில் உள்ள பழமையான எண்ணற்ற இடங்களில் மராட்டிய அரண்மனை முக்கிய ஒன்றாகும்.
இந்த அரண்மனைக்குள் சென்றால் 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்றதை போல உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு இந்த அரண்மனைக்குள் எண்ணற்ற பொக்கிஷங்கள் இருக்கிறது
அதில் ஒரு பகுதியாக அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய உடைகளிலிருந்து ஆயுதங்கள் வரை பல பொக்கிஷங்கள் இருக்கிறது அவற்றை பற்றி பார்ப்போம்.
தஞ்சை அரண்மனை நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1674 இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது.
இந்த அரண்மனை வளாகத்தில்தான் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம்,
அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன
இந்த அருங்காட்சியகமானது அரண்மனையின் முதல் மாடியில் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த புகைப்படங்கள் & சரபோஜி மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ராஜாக்களின் உடைகள்,
அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ஓலைச்சுவடிகள் & ராஜாக்கள் பயன்படுத்திய நாற்காலிகள், வீணைகள் & அக்காலத்து துப்பாக்கிகள், வாள்கள், பழங்கால பீங்கான் பொருட்கள் உள்ளன.
மேலும் அக்கால மக்கள் சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் 20 நாடுகளின் நாணயங்கள், இந்தியாவில் ஆரம்பகால முதல் இக்காலம் வரை இருக்கும்
அனைத்து நாணயங்களும் உதாரணமாக டச்சு நாணயம், சூரத் நாணயம் இது போன்று இருபதுக்கும் மேற்பட்ட நாணயங்கள் இங்கு உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் குகை ஒன்று மிக நீண்ட தூரம் இருக்கின்றது. ஆனால் பாதுகாப்பின்மை காரணமாக அந்த அந்த குகையானது அடைக்கப்பட்டுள்ளது.
இந்த அரண்மனைக்கு நீங்கள் வரவேண்டும் என்று நினைத்தால் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து வடக்கு திசையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.