ட்ரெய்னா... ஸ்கூலுங்க..! அரசு பள்ளியை வேற மாறி மாற்றிய ஆசிரியைகள்.!

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 130 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக சித்ரா மற்றும் ஆசிரியைகளாக சிவசங்கரி, லதா, ரேவதி ஆகிய 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் செய்தனர்

ஆனால் அவர்களுக்கு விமானத்தை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என முடிவெடுத்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தனர்

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு, மாணவர்களின் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்தனர்

மேலும் முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசு சார்பில் நிதி அளிக்கபட்டது. இதையடுத்து பள்ளி சுவரில் விமானம், ரெயில், கப்பல், ஆம்னி பஸ் போன்றவற்றின் வரைப்படத்தை ஓவியர் நரசிம்மன் மூலம் தத்ரூபமாக வரைய செய்தனர்

இதேப்போல் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள், தண்ணீர் சேமிப்பு, நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன

மேலும் இப்பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்களின் உருவத்தையே சுற்று சுவரில் வரையப்பட்டுள்ளன

Stories

More

நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் உரமாகும் காய்கறி கழிவுகள்!

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

ஆசிரியைகளின் இந்த அசத்தல் செயலால் மாணவ-மாணவிகள் சுவரில் வரையப்பட்டுள்ள விமானம், ரெயில், கப்பல் போன்றவற்றில் ஏறுவது போல வகுப்பறைக்குள்செல்கிறார்கள்

பின்னர் அவற்றில் இருந்து இறங்குவது போல வகுப்பறையிலிருந்து வெளியே செல்கின்றனர். இதேப்போல் செயற்கைக்கோள், விவசாயம் உள்பட பல்வேறு ஓவியங்களை பார்த்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கின்றனர்

இந்த தத்ரூப ஓவியம் மூலம் படிப்போடு பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்து கொள்கின்றனர். ஆசிரியர்களின் இந்த செயலால் பிள்ளையார்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியானது தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் உள்ளது

மேலும் மாணவர்களின் விருப்பத்தை விதியாசமான முறையில் தத்ரூபமான ஓவியங்களால் நிறைவேற்றிய தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளை பலரும் பாராட்டி வருகின்றனர்

விழுப்புரத்தில் தயாராகி உள்ள பல வண்ண அகல் விளக்குகள்.!