ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் உள்ள புயலால் பாதிக்கப்பட்டு நினைவு சின்னங்களாக உள்ள இடத்தையும், மன்னார் வளைகுடாவில் இருந்து வரும் குளிர்ந்த காற்று கடலின் இயற்கையின் அழகினை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு கோதண்டராமர் கோவில் முதல் அரிச்சல்முனை வரையில் 15 கிலோமீட்டருக்கு இருக்கும் சதுப்பு நிலங்கள் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில்
வெளிநாடுகளில் இருந்து நாரை வகை, கொக்கு வகை, ஆலா வகை, உள்ளான் வகை, நீர்க்காகம், ப்ளமிங்கோ, போன்ற 50-க்கும் அதிகமான பறவை இனங்கள் வந்து செல்லும்
தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பறவைகளையும் காண ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் தொலைவில் உள்ள நிலப்பகுதி மற்றும் மரங்களில் இதனை எளிதாக காண முடியாது
இந்நிலையில், சீசன் நேரத்தில் முகுந்தராயன் சத்திரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாங்காரோவ் மரங்களில் வலசைக்கு வரும் பறவைகளை காண மரப்பாலத்துடன் கூடாரம் அமைத்து
இதில் இரண்டு தொலைநோக்கிகள் வைத்து பறவைகள் காணவும், மாங்குரோவ் காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அமைத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
தற்போது, சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி உள்ளது. பருவமழை காலங்களில் பறவைகளை குவிந்த பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்லலாம்
மேலும், இயங்கும் நேரம் மற்றும் அனுமதி கட்டணங்கள் குறித்த விவரங்கள் விரைவில் முடிவெடுத்து அமல்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
பட்டாசு எப்போது வாங்கலாம்.? கம்மியான விலையில் வாங்க இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க.!