இளைய தலைமுறையினரிடம் மகளிர் குழுக்களின் உற்பத்திப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
அவர்களிடம் சென்றடையவும் ஏதுவாக தென்காசி மாவட்டத்தின் முக்கிய கல்லுாரிகளில் கல்லுாரி சந்தை என்ற பெயரில் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 3 கல்லுாரிகளில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது
இதன் மூலம் 105 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.5.94 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகி உள்ளன என மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தெரிவித்தார்
இந்த ஆண்டிற்கான கல்லூரி சந்தை சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லுாரி சந்தையில் 49 மகளிர் உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு உள்ளனர்
தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பங்கேற்று உள்ளனர்
ஆயத்த ஆடைகள், கைத்தறி சேலைகள், மண்பாண்டங்கள், உணவுப்பொருட்கள் செயற்கை ஆபரணங்கள் என பல்வேறு பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன
இதனை மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்