தென்காசியில் இந்த அருவிக்கு மட்டும் குளிக்க போகாதீங்க.!

தென்காசி மாவட்டம் புளியங்குடிக்கு அருகில் அமைந்துள்ள புன்னையாபுரத்தில் முந்தல் அருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது

பொதுவாக குற்றாலத்தில் சீசன் இருக்கும் நேரங்களில் மற்றும் தென்காசி புளியங்குடி சுற்றுவட்டாரங்களில் மழை பெய்யும் நேரங்களில் முந்தல் அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்

ஆனால் தற்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வரும் சூழலிலும் புளியங்குடி முந்தல் அருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது

தென்காசியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முந்தல் அருவி கடையநல்லூர் தாண்டி புளியங்குடிக்கு முன், புன்னையாபுரம் பகுதியில் உள்ளது 

போகிற வழி முழுக்க மலை நோக்கி பயணம் பண்ற மாதிரி ஒரு அனுபவம் இருக்கும். இரண்டு புறங்களும் பச்சை பசேரேன்று வயல்வெளிகளும், காட்டுப்பகுதி என்பதால் அங்கங்க காவல் தெய்வங்களும் அமைந்திருக்கும்

முந்தல் அருவியில் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நல்ல மழை பெய்தால் தண்ணீர் இருக்கும்

ஆனால் தற்போது அவ்வப்போது புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தும் முந்தல் அருவியில் தண்ணீர் இல்லாமல் காட்சியளிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மலை அடிவாரத்தில் குடைவரை கோவில் அமைப்பில் இருக்கிற இடத்திலிருந்து வழக்கமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த இடத்தில் குளிக்கிறதுக்கோ, வண்டியை நிறுத்தறதுக்கோ எந்தவித கட்டணமும் கிடையாது

தற்போது மூந்தல் அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது மற்றும் வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்

next

ஹோட்டல்ல சாப்பாடு சரியில்லையா.? இப்படி தான் புகார் அளிக்கனும்.!