எல்லை தெய்வம் அய்யனாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி பற்றி தெரியுமா.?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா 48 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சித்திரைத் திருவிழாவின் 6 ஆம் நாள் அன்று காலை சங்கரன்கோவில் தெற்கு எல்லையில் எழுந்தருளியிருக்கும் காவல் தெய்வமாகிய ஸ்ரீ பூர்ணகால புஷ்பகலா சமேத திருமேனி அய்யனாருக்கு திருக்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டன

வரும் ஐந்து நாட்கள் காலை மற்றும் மாலை திருமேனி அய்யனார் வீதி உலா நடைபெறும். இதனைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை 10 ஆம் திருநாள் அன்று மாலை உக்கிரபாண்டிய மகாராஜா வீதி உலா நடைபெறும்

சித்திரை திருவிழாவின் முக்கிய திருநாளான தேரோட்டம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. சித்திரை திருநாளில் சுவாமி அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.