தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 வயதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மாணவர்கள் ஸ்கேட்டிங் கற்று வருகின்றனர்
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஸ்கேட்டிங் செய்வதற்கென தனியாக எந்தவித அரங்கங்களும் கிடையாது
இருந்த போதிலும் ஆளில்லாத சாலைகளில் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டு உலக சாதனை படைத்து வருகின்றனர் தென்காசி மாவட்ட குட்டீஸ்
ஆள் இல்லாத சாலைகளில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்து மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவு போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம் வெள்ளி மற்றும் பிரான்ஸ் மெடல்களை அள்ளி குவித்து வருகின்றனர். ஸ்கேட்டிங்கில் மொத்தம் மூன்று நிலைகள் உள்ளது
இதில் இரண்டு வயது குழந்தைகள் கூட மூன்றாம் நிலையான இன்-லயன் ஸ்கேட்டிங் கற்று அசத்தி வருகின்றனர்
அது மட்டும் அல்லாமல் 4 வயது குழந்தை கூட ஸ்கேட்டிங்கள் தங்க பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் தென்காசி மாவட்டத்திற்கு என தனியாக ஸ்கேட்டிங் பயிற்சி மைதானங்கள் கிடையாது. இருந்தபோதிலும் சாலைகளில் பயிற்சி செய்து மாணவர்கள் மடல்களை அள்ளி குவித்து வருகின்றனர்
தென்காசி மாவட்டத்திற்கு என ஸ்கேட்டிங் பயிற்சி மைதானங்கள் அமைத்து தர வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி செய்ய விரும்பும் மாணவர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது