விக்ரமின் தங்கலான் படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம் இதோ...

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ளது தங்கலான்

KGF-ல் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதுவரை எந்த ஒரு படமும் சொல்லாத இவர்களின் கதையை படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார்

படத்தில் விக்ரம் கதாபாத்திரம் காண்போரை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது

பழங்குடியினரின் வாழ்வியல், அவர்களின் கலாச்சாரம் மற்றும் உடை என ஒட்டுமொத்தத்தையும் கண்முன் காட்டுகிறது விக்ரமின் கெட்அப்

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆக்ஸ்ட் 15  உலகம் முழுவதும் தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா.? ரசிகர்களின் ட்விட்டர் ரெவ்யூ சொல்வதென்ன.?

தங்கலான் படம் குறித்து ட்விட்டரில் விக்ரமின் நடிப்பை பலர் பாராட்டி உள்ளனர்

படத்தில் அனைவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

மேலும் பா.ரஞ்சிதின் இயக்கம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

next

தனது வித்தியாசமான தோற்றதால் 10 முறை ரசிகர்களை அசத்திய தங்கலான் ஸ்டார் சீயான் விக்ரம்.!