3 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகும் தஞ்சாவூர் ஓவியங்கள்.! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

தஞ்சாவூர் ஓவியங்கள் என்றாலே தனி சிறப்பை பெற்றதாகும். எத்தனையோ ஓவியங்கள் இருந்தாலும் தஞ்சாவூர் ஓவியத்தின் அழகே தனி சிறப்பு தான். எந்த ஊரில் இந்த ஓவியம் வரையப்பட்டாலும் தஞ்சைக்கு தான் புவிசார் குறியீடு மத்திய அரசு கொடுத்திருக்கிறது‌

சோழர்களின் காலத்தில் உருவான இந்த ஓவியம் நாயக்கர் காலம் தொட்டு, மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களிலே தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலை இந்த ஓவிய பாணியா இருந்துள்ளது

தற்போது தஞ்சை ஓவியங்கள் தற்கால தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வரையப்பட்டு உலக அளவில் விற்பனையாகி வருகிறது

எனவே பாராம்பரிய முறையை கெடுக்காமல் சில புது வசதிகளை பயன்படுத்தி தஞ்சாவூர் ஓவியங்கள் தஞ்சையில் பலரால் காலம் காலமாக வரையப்பட்டு வருகிறது

இவ்வளவு சிறப்புகள் உடைய இந்த ஓவியம் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் தஞ்சை ஓவியத்தின் விலை மற்றும் அதன் சிறப்பை பூம்புகார் விற்பனை நிலையத்தின் மேலாளர் சக்தி நமக்கு விளக்குகிறார்

தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினை கலைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான கைவினை பொருட்களை ஏற்று , விற்பனை செய்து வருகிறது

அந்த வகையில் தஞ்சையின் வரலாற்று சிறப்புமிக்க விலையுயர்ந்த தஞ்சை ஓவியங்களும் தஞ்சையில் அதன் பழமையை கெடுக்காமல் பலர் செய்து வருகின்றன

அந்த ஓவியங்களும் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் இங்கு உள்ளது. அதன்படி ₹2500-₹3.5 லட்சம் வரையிலான ஓவியங்கள் இங்கு உள்ளது

ஏன் இவ்வளவு விலை என்றால் அதில் உள்ள கை வேலைபாடுகளே காரணம் . வண்ண வண்ணமான கண்ணாடி துகள்களும், தங்க இலைகளுமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது

கடவுள் உருவம் பதித்த ஓவியங்களே அதிக அளவில் உருவாக்கப்படும் ஏனென்றால் பெரிய நிறுவனங்கள், கடைகளில் பிரமாண்டமான கடவுள் ஓவியங்கள் வைப்பார்கள். இந்த ஓவியங்களை தஞ்சையை விட வெளி மாநிலம், வெளிநாட்டு மக்கள் விரும்பி வாங்குகின்றனர்

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலும் பெரும்பாலானோர் தஞ்சை ஓவியங்களை விரும்பி வாங்குகின்றனர்

தஞ்சை ஓவியங்களை எல்லோரும் விரும்பினாலும்விலையுயர்ந்த ஓவியம் என்பதால் பலர் இந்த ஓவியங்களை வாங்க விரும்புவதில்லை. இங்கு உள்ள ஓவியங்களை அதன் பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக antic finish செய்யப்பட்டிருக்கிறது

திருச்சியின் மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா.?