குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி நல்வழியில் பயணிக்க உதவும் வகையிலும் தஞ்சாவூர் தெற்குநகரக் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் அறிவகம் என்ற நூல் நிலையத்தை ஏற்படுத்தி அசத்தியுள்ளார்
காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவதற்குத் தேவையான புத்தகங்கள், பள்ளிமாணவர்களுக்கான அரிய வகை புத்தகங்கள், வரலாற்று நிகழ்வு குறித்த புத்தகங்கள் என ஏறத்தாழ ஆயிரம் நூல்கள் இடம்பெற்றுள்ளன
மேலும் இது குறித்து ஆய்வாளர் ரமேஷ் கூறுகையில் பொதுமக்கள் புத்தகங்கள் வாசிக்கும் பழக் கத்தை வளர்த்துக் கொண்டால், குற்றங்களைக் குறைக்க முடியும்
காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் ஒருவித மன அழுத்தத்துடன் இருப்பர். அவர்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தவும், காவல் நிலையத்தைப் பார்த்து அச்சப் படுவதைத் தவிர்க்கவும் இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும்
இதில் எனது சொந்தப் புத்தகங்களுடன், காவல் நிலையத்தில் பணியாற்றி மாறுதலில் சென்ற காவலர்கள் பரிசாக வழங்கிய புத்தகங்கள், சில ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கெடுத்த புத்தகங்கள் இங்கு உள்ளன என்று கூறினார்