வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் தஞ்சை அரசு பள்ளி.!

தஞ்சை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிப்பையும் தாண்டி மாணவிகளின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கான பயிற்சி கொடுத்து பல போட்டிகளில் பங்கேற்க வைத்து மாணவர்களின் தனித்திறமையை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பள்ளியின் அழகை மேலும் மெருகூட்டுவதற்காகவும், வரலாற்று சிறப்புகள் மற்றும் நல்லொழுக்கத்தை மாணவர்கள் மனதில் ஆழப் பதிக்க வேண்டும் என்பதற்காகவும்

பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்து சுற்று சுவர் முழுவதும் பல்வேறு வகையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன

நுழைவாயிலின் இருபுறமும் உள்ள சுற்றுச்சுவரில் ஒரு பக்கம் தமிழர்களின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் 

மற்றொரு சுவரில் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய நற்பண்புகள், சமூக கடமைகள்‌ பற்றிய தெளிவான புரிதலுடன் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வண்ண ஓவியங்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பார்த்தாலே புரியும் வகையில் மிக அழகாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களை பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி ‌அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பார்த்துச் செய்கின்றனர்.

தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு போயிருக்கீங்களா.?