மாவொளியோ மாவொளி... பத்தவச்சு சுத்திவிட்டா Fire கிக்கு.. மாசற்ற மத்தாப்பை  கொண்டாடி தீர்த்த இளைஞர்கள்.!

தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்நாள் கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது

கார்த்திகை தீப திருநாளின் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பெருந்தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் மக்கள் வீடுகளில் கோவில்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை திருநாள் நவம்பர் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது

இந்த நிலையில் பண்டிகை காலங்களில் தமிழர்களின் வழக்கத்தில் ஒன்றாக இருந்த மாவொளியை தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே பனையேறிகளுடன் சேர்ந்து இளைஞர் சுற்றி கொண்டாடினர்

மாவொளிபனை மரத்தில் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படுவதால், மாசற்ற மத்தாப்பு கொண்டாட்டம் என்பதாலும் பனை மரத்தில் நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை உணர்த்துவதற்காகவும் பனை தொழிலை மீட்டெடுக்கும் விதமாகவும் இளைஞர்கள் மாவொளி சுற்றி கொண்டாடினர்

மேலும் இது குறித்து இளைஞர்கள் கூறுகையில்’ பனை மரத்தில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பனையேறிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக தொடர்ந்து மாவொளி சுற்றும் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் செய்து வருகிறோம்

முழுவதும் பனை மரத்தில் கிடைக்கும் பொருட்களால் ஆன இந்த மாவொளியை பனிக்காலங்களில் சுற்றும் போது அதில் இருந்து வரும் நெருப்பு காற்றாகையில் அதை நாம் சுவாசிக்கும் போது விஷ பனிகளில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்று கூறப்படுகிறது

முக்கியமாக தீபாவளி மற்றும் கார்த்திகை தின விழாவில் மாவொளி சுற்றுவது தமிழர்களின் மரபு நிகழ்ச்சியாக இருந்துள்ளது. தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. “வித்தியாசமாக இருக்கிறதே” என்று பார்க்கிறார்கள்

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இது நம் வாழ்வியலில் ஒன்றாக இருந்துள்ளது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. மாசில்லாமல் ஒரு கொண்டாட்டம் என்றால் அது மாவொளி தான்

தொடர்ந்து இதன் சிறப்புகளையும் அழிந்து வரும் பனையேறிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எங்களின் நோக்கம் என்று கூறினர்

சர்வதேச ஓட்டப்பந்தய போட்டிக்கு மாற்றுத்திறனாளி மாணவி சுபஸ்ரீ பி தகுதி.!