நாமக்கல்லில் 3-வது நாளாக களைகட்டிய கலைத் திருவிழா.!

மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்

இதனையொட்டி 3 பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெறுகிறது. தனி நபர் அல்லது குழுக்களாக மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கவின்கலை - நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் என 6 தலைப்புகளில் போட்டிகள் ஒரு பிரிவாக நடைபெற்றது

Stories

More

உதகை சாலைகளில் கொப்பளிக்கும் கழிவு நீர்..

அஷோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் ஸ்பாட் இது தான்..

ராகு கேது தோஷங்கள் நீங்க இவரை வழிபட்டால் போதும்!

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை - நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, தோற்க்கருவி, நடனம், நாடகம், மொழித்திறன் என 9 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காண்கலை - நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, துளை காற்றுக்கருவிகள், இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் 9 தலைப்புகளில் போட்டிகள் ஒரு பிரிவாகவும் நடைபெற்றது

இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவரும் தெருக்கூத்து, கிராமப்புற இசை, மற்றும் காளி வேடம் அணிந்து வந்த சிறுவன் கதாபாத்திரங்களை உள்வாங்கி தத்ரூபமாக கலைத்திருவிழாவில் வெளிப்பபடுத்தி அசத்தினார்

பெரிய கோயிலில் மேலும் ஒரு பிரமாண்டம்..! நாட்டியம் ஆடிய 1038 கலைஞர்கள்.!