வாழ்நாள் முழுவதும் வாழ்வாதாரத்திற்கு உழைத்து இறுதியில் முதிர்ச்சியோடு ஓய்வு நிலைக்கு வரும் மூத்த குடிமக்கள் பலர் மன அமைதி வேண்டி ஆன்மீக யாத்திரை செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
தற்போது அவர்களுக்கான கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது
வருகின்ற புரட்டாசி மாதம் வைணவ கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை,
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு 100 பக்தர்களை அழைத்து செல்ல அறநிலையத்துறைத்துறை திட்டமிட்டுள்ளது
மூத்த குடிமக்கள் மட்டும் அழைத்து செல்லப்பட உள்ள நிலையில் அவர்கள் 60 முதல் 70 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
அறநிலையத்துறை இந்த ஆன்மீக பயணத்தை வரும் 21.09.2024, 28.09.2024, 05.10.2024, 12.10.2024 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக அழைத்து செல்ல உள்ளது
இந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் www.hrce.tn.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வரும் 19.09.2024 க்குள் மண்டல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்
பெண்களின் உடலில் அதிக அளவு யூரிக் அமிலம் இருந்தால் ஏற்படும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்.!