ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மாற்றம்... எங்கு தெரியுமா.?

ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதில், புதுச்சேரி சுற்றியுள்ள பகுதியில் நடக்கும் விபத்து மற்றும் அவரச சிகிச்சை தேவைப்படுவோர் ஜிப்மர் மருத்துவமனையை பயன்படுத்தி வந்தனர்

ஜிப்மர் மருத்துவமனையின் நுழைவு வாயில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது

இங்கு, தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளதால், தற்காலிகமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு இணைப்பு கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்க உள்ளது

இதுகுறித்து ஜிப்மர் மருத்துவ இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அவசர கால சிகிச்சை பிரிவு கட்டடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்கும் பணிகளை ஜிப்மர் மேற்கொள்ள உள்ளது

இந்த நிறுவல் பணிக்கள் முடிய சுமார் 4 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த கால கட்டடத்தில் ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் (எஸ்.எஸ்.பி.) இணைப்பு கட்டிடத்தில் நாளை முதல் தடையற்ற அவசர கால சேவைகளை ஜிப்மர் தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

next

குழந்தைகள் விரும்பி உண்ண ஆரோக்கியமான 7 இட்லி வகைகள்.!