தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்...  மீனவர்களை வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு.?

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 2500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்

ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதிலிருந்து ஜூன் 15-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலங்களாக கருதப்படுகிறது

இந்த நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் மீன்களின் முட்டை மற்றும் குஞ்சுகள் அழிந்துவிடும் என்பதால் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அரசு சார்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில், மீன்பிடி தடைக் காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், கடலில் இருந்து விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் கரைக்கு கொண்டு வரும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்

விசைப்படகுகளை கரையில் ஏற்றி பராமரிப்பு பணிகள் மற்றும் வர்ணங்கள் பூசி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

தடைக்காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை வைக்கின்றனர்

அதில் தடைக்கால நிவாரண நிதி 8000 ஆயிரம் ரூபாயை வரும் 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையும் போதுமானதாக இல்லை என்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.500 என கணக்கிட்டு ரூ.30,000 வழங்க வேண்டும் எனவும்,

பல லட்சம் செலவு செய்து தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்றால் இறால், நண்டு, கணவாய் போன்றவற்றிற்கு உரியவிலை கிடைக்கவில்லை, இவற்றிற்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்