திருநெல்வேலியில் மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது
மாவட்டத்திலுள்ள பிரதான அருவிகளில் ஒன்றான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது
இதனால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து ஆனந்தமாகக் குளித்துச் செல்வது வழக்கம்
இந்நிலையில் கடந்த வாரம் ஜூன் 26ஆம்தேதி மாஞ்சோலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது
தற்போது நீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து 6 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது
இருப்பினும் மாஞ்சோலை செல்லச் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்வதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது
கடலை ரசித்த படி மீண்டும் ரயிலில் பயணிக்கலாம்.!