அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கோபுரத்தில் விழும் சூரிய ஒளி... ஆண்டுக்கு இருமுறை நிகழும் அதிசயம்.!

கொங்கு ஏழு சிவதலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் திகழ்கிறது

இக்கோயிலில் ஆண்டுதோறும் உத்தராயின காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம்

இக்கோயிலில் ஆண்டுதோறும் உத்தராயின காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது சூரிய பகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வது ஐதீகம்

இந்த ஆண்டு சூரிய உதயத்தின் போது, பழமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி செங்கதிராக ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்து, வணங்கியது. செந்நிறமாக அவிநாசிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

இந்த ஆண்டு சூரிய உதயத்தின் போது, பழமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி செங்கதிராக ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்து, வணங்கியது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

காலை 6.45 மணிக்கு தொடங்கி, 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து, படிப்படியாக மறைய ஆரம்பித்தது

இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வு ஒரிரு நாட்களுக்கு காலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை சூரிய ஒளி விழும் நிகழ்வு என்பது மேலும் சிறப்புக்குரியது