கொல்லி மலையின் அதிசயம் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி...

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி மன்னன் ஆண்ட மலை என்ற பெருமை இதற்கு உண்டு

இங்கு மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் தமிழ்நாட்டின் மூலிகை தோட்டம் என அழைக்கப்படுகிறது

கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகிய அருவிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக இருக்கும்

ஏனென்றால் சுமார் 1,200 படிக்கட்டுகளை கடந்து 300 அடி உயரத்தில் இருந்து கொட்டும் நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது வழக்கம்

இந்த நீர்வீழ்ச்சியை கீழ் இருந்து பார்த்தால் ஆகாயத்தில் இருந்து நீர் கொட்டுவது போல் தெரியும்

இந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி காலை 6.00 மணியிலிருந்து மாலை 4.00 வரையும் திறந்து இருக்கும். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது

இதனால் அங்குள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்லின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது

next

சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பரான வரவேற்பு… ஊட்டியில் தோடர் வாழ்வியலை உணர்த்தும் அமைப்பு.!