மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அழகர் கோவில், மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் போன்றவை முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகின்றன
இதுபோக மதுரையில் இன்னொரு பிரம்மாண்டமான சுற்றுலாத்தளம் அமைக்கப் போவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது
அதன்படி மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள சுந்தரம் பூங்காவை ரூ.41 கோடி 16 லட்சம் மதிப்பில் ஹைடெக் பூங்காவாக அமைக்கப் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டு அதற்கான பணிகளும் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகின்றது
இதனையடுத்து பார்க்கின் கடைசி பகுதியில் இருந்து வேலைப்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது பார்க் முழுவதுமே வேலைப்பாடுகள் நடக்கின்றது
இந்த பார்க்கில் நடைப்பயிற்சி பூங்கா, விளையாட்டு அரங்கம் ,ஸ்கேட்டிங் தளம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் வருவதற்கு என்று பார்க்கில் உள்ள பழைய ஸ்கேட்டிங் தளம் இடிக்கப்பட்டும்,
ஆங்காங்கே அரங்குகள் அமைக்கப்பட்டும், புதிய நடைபாதைகள் அமைக்கக்கூடிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது
தற்பொழுது இந்த பார்க் முழுவதுமே பணிகள் நடைபெற்று வருவதினால் பொதுமக்களின் வருகை குறைந்து பார்க்க முழுவதும் ஹைடெக் பூங்காவாக மாற்றக்கூடிய பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றது